சென்னையை அடுத்த தாம்பரத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வந்த இளைஞர் மற்றும் பைக்கை வாங்கி விற்றவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பெருங்களத்தூரை சேர்ந்த விஜயேந்திரன் தாம்பரத்தில் நிறுத்திய தனது பைக்கை காணவில்லை என காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் வாங்கிங் ஸ்டிக் உடன் வந்து பைக்கை லாவகமாக திருடி சென்றது தெரிந்தது. அடுத்தடுத்து பைக்குகள் காணமல் போனதாக வந்த புகாரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில் ஒருவரே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டதும், திண்டிவனத்தை சேர்ந்த விஜயிடம் பைக்கை விற்றதும் தெரியவந்தது.