சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய பகுதியில் உள்ள மரத்தில் இளைஞரின் சடலம் தூக்கில் தொங்குவதைக் கண்டு வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லபாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் தொங்கிய இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.