புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியில் மர்மமான முறையில் இளைஞர் சடலமாக கிடந்த வழக்கில் 14 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தோப்புக்கொலை பகுதியை சேர்ந்த சுதாகர், தனது நண்பரான விக்னேஷுடன் வெளியே சென்றிந்த நிலையில் பாலம் அருகே படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.அவருடன் சென்ற நண்பர் விக்னேஷ் தலைமறைவானார். இதனையடுத்து சுதாகரின் பெற்றோர் விக்னேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன் உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.இச்சம்பவம் நிகழ்ந்து 14 நாட்களாகியும் தனது மகனை கொலை செய்த குற்றவாளியை கைது செய்யவில்லை என கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.