கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமன்தொட்டியை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் எஸ்.பி.ஐ வங்கியின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத அபிஷேக் படியில் அமர்ந்து குளித்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி வெளியில் வர முடியாமல் நீண்ட நேரம் போராடினார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்ததும் விரைந்து வந்த வீரர்கள் இளைஞரின் சடலத்தை மீட்டனர்.