சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மசூதியில் இரவுத் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 4-வது மாடியில் இருந்த ஜன்னல் சன்சைடு இடிந்து தலை மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் குலாப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.