தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் சக்திவேல் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை எனக்கூறி விரக்தியில் இருந்து வந்த நிலையில், உயிரை மாய்த்து கொண்டார்.