வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் திருமண வரவேற்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞர் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நண்பரின் திருமண வரவேற்பில் பங்கேற்றார். அப்போது, நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து மருந்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.