நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞர், 3 நாட்களில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூலி வேலை செய்து வந்த ஜோதிகிருஷ்ணன், திடீரென உயிரை மாய்த்து கொண்டார்.