தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 130 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் முதலில் "எங்களை சேர்த்து வைங்க." பின் "பிரித்து வைங்க.." என மாத்தி மாத்தி அலப்பறை செய்தார். விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மகாலிங்கம். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் அங்குள்ள 130' அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அவரது மனைவி, மகனை பேசவைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின் அவரை கீழே வரவழைத்தனர்.