திருப்புவனத்தில், அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை ஒட்டி, இளைஞர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள கே.எல்.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தமிழ்த்துறை இணைந்து, ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர் விழிப்புணர்வு தினம் மற்றும் RTI – தகவல் அறியும் உரிமை சட்டம் வாரம் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மாணவர்கள் RTI விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, தொடர்ஜோதி எடுத்து மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. திருப்புவனம் சந்தை பகுதியில் தொடங்கிய ஜோதியுடன் கூடிய மாரத்தான் ஓட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.