தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேவர் ஜெயந்தி விழாவில் அட்ராசிட்டி செய்த இளைஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கானா விளக்கு பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர். அப்போது, பைக்குகளில் வந்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். சாலையில் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் கைது