கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்று பாலத்தில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர், தீயணைப்பு வீரரின் எச்சரிக்கையும் மீறி ஆற்றில் குதித்த வீடியோ வெளியாகியது. ஓடத்துறை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர், பவானியாற்றில் பல அடி உயரத்தில் உள்ள பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். இதனை பார்த்த தீயணைப்பு வீரர் ஒருவர், ஆகாஷை தடுக்க முயன்றார். அதனையும் மீறி ஆபாத்தான முறையில் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கும் வெள்ளத்தில் குத்தித்தார்.நல்வாய்ப்பாக ஆகாஷ் ஆற்றில்நீந்தி சென்று கரையேறி உயிர் தப்பிய நிலையில், அவரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.