கோவை மாவட்டம் அன்னூர் அருகே லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை மது அருந்த வைத்து தாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சொக்கம்பாளையம் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சபரி, கருமத்தம்பட்டி சாலையில் சென்ற இளைஞனிடம் சாமாளாபுரம் போக வேண்டும் என லிப்ட் கேட்டுள்ளான். அப்போது சிறுவனை மதுபான கடை அழைத்து சென்ற இளைஞர் மது அருந்த வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.