திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக மாமாவை வெட்டி படுகொலை செய்த இளைஞர் 9 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். வக்கணம் பட்டி பகுதியைச் திம்மராயன் என்பவரை அவரது அக்கா மகனான சக்கரவர்த்தி என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தலைமறைவானார். இந்நிலையில் 9 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர்