வேலூரில் 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலூர் பழைய டவுன் பகுதியை சேர்ந்த 35 வயதான மணிகண்டன் என்பவர், காதலிப்பதாக அந்த மாணவியிடம் தொல்லை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.