திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மெக்கானிக் வேலை பார்த்து வந்த இளைஞர், கல்லூரி மாணவியை வீட்டில் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.