திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். கல்லக்குடி அருகே மால்வாய் கிராமத்தை சேர்ந்த கோகுல் என்பவர், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் செவிலியரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.