தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தேனி தேவாரம் ஐயப்பன் கோவில் தெருவை சார்ந்த சிவ சந்துரு, 15 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது ஆசைக்கு சிறுமியை இணங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் சிவசந்துருவை கைது செய்தனர்.