விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பேருந்து நிலையம் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். திருப்பாச்சேத்தி அருகேயுள்ள பிச்சப்பிள்ளையேந்தல் கிராமத்தை சேர்ந்த சாமியப்பன் என்ற அந்த நபர், இந்தியா ஒன் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார்.