பழனியில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் தப்பியோட முயன்றதால், அவரது காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்த காந்தி என்ற பெண்ணை, கத்தியால் குத்தி கொலை செய்த ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சாமியாரை பராமரிப்பதற்கான பணத்தை பங்கிட்டு கொள்வதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.