புதுச்சேரியில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி 10 கோடி வரை மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சவுந்தரராஜன் என்பவர் மீது மேட்டுபாளையம், பெரியக்கடை காவல்நிலையத்தில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அதில் கிடைத்த பணத்தை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி நிலங்கள் வாங்கி வைத்திருப்பது தெரியவந்தது.