சென்னை பல்லாவரத்தில் காதலித்த பெண்ணுடன் உடலுறவு வைத்து விட்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணம் செய்ய மறுத்த நபரை கைது செய்த போலீசார் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 28 வயது பெண் கல்லூரியில் காலத்தில் சதீஷ்குமார் என்பவருடன் காதல் மலர 2023 ம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தில் விருப்பமில்லை என திடீர் பல்டியடித்த சதீஷ்குமார் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி, காதலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.