ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உதவி மையம் அமைத்து எழுத படிக்க தெரியாத பொதுமக்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தனியாக உதவி மையம் அமைத்து அதன் மூலம் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பொதுமக்களின் மனுக்களை எழுதி கொடுத்து உதவி செய்தனர்.