கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை மதுபோதையில் வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டாம்பாக்கம் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி 3 நபர்கள் சாலையில் டேங்கர் லாரியை வழிமறித்து,லாரி டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தகராறில் ஈடுபட்ட பி.என் பாளையம் பகுதியைச் சேர்ந்த தானு மற்றும் ரங்கீஸ்வரன் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.