கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் காதல் திருமணம் செய்து 3 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கதிரவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கணவன் இரவு பணிக்கு சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.அதில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.