MAAZA ஜூஸில் மயக்க மருந்தை கலந்து மூதாட்டியை குடிக்க வைத்த இளம் தம்பதி. சிலநொடிகளில் மூதாட்டி மயங்கியதும் 3 சவரன் செயினை எடுத்துக்கொண்டு இளம்தம்பதி ஓட்டம். இளம் தம்பதி கொடுத்த ஜூஸை மறுக்காமல் மூதாட்டி வாங்கி குடித்தது ஏன்? செயினை திருடிக் கொண்டு போன தம்பதி பிடிபட்டார்களா? ஜூஸ் குடிச்சதும், மூதாட்டிக்கு கிறுகிறுன்னு வந்துருக்குது. அடுத்த கொஞ்ச நேரத்துல மயங்கி கீழே விழுந்த மூதாட்டியை படுக்க வச்சிட்டு அவங்க கழுத்துல இருந்த 3 சவரன் செயினை திருடிட்டு போயிட்டாங்க ஒரு இளம் தம்பதி.நாலு மணி நேரம் கழிச்சி மயக்கம் தெளிஞ்சி எந்திரிச்ச மூதாட்டி தன்னோட கழுத்துல செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. உடனே தன்னோட மகனுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரவச்ச மூதாட்டி, போலீஸ் ஸடேஷனுக்குப்போய் கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அப்பதான், மூதாட்டிக்கு ஜூஸ் குடுத்த இளம் தம்பதி யாரு? அவங்களுக்கு எந்த ஊருனு எல்லா விவரமுமே தெரிஞ்சது.கன்னியாகுமரி, தக்கலை பக்கத்துல உள்ள சாரோடு பகுதியில இருக்காங்க 65 வயசு மூதாட்டி வசந்தா. மகன் கூலி வேலைக்கு போறதால மூதாட்டி மட்டும் தான் பகல்நேரத்துல வீட்டுல தனியா இருக்குறது வழக்கம். நாலு வருஷத்துக்கு முன்னால மூதாட்டியோட வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு வீட்டை அபிங்குற பொண்ணு விலைக்கு வாங்கி அங்க வசிச்சிருக்காங்க. வசந்தாவ ஆச்சி ஆச்சினு கூப்பிட்ட அபி, தூங்குற நேரத்த தவிர மத்த நேரங்கள்ல மூதாட்டி வீட்டுலதான் பொழுதை கழிச்சிருக்காங்க. இந்த சூழல்ல ஒன்றரை வருஷத்துக்கு முன்னால வீட்டை வித்த அபி, தன்னோட கணவரையும் கைக்குழந்தையையும் அழைச்சிக்கிட்டு நாகர்கோவில் இடலாக்குடி பகுதிக்கு போயிட்டாங்க. அதுக்குப்பிறகு சில மாசங்கள் சாரோடு பக்கம் அபி வரவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால திடீர்னு மூதாட்டி வீட்டுக்கு வந்துருக்காங்க அபி. குழந்தையோட வந்த அபியை மூதாட்டி சந்தோஷமா கூப்ட்டு சாப்பாடு போட்டு உபசரிச்சிருக்காங்க. அப்டி வந்த நேரத்துல மூதாட்டி பக்கத்துல படுத்திருந்த அபி, வசந்தாவோட கழுத்துல கிடந்த செயினை புடிச்சி பாத்து நல்ல டிசைனா இருக்குதுனு சொல்லிருக்காங்க. அப்டியானு கேட்ட மூதாட்டி அத பெருசா எடுத்துக்கல.ஆனா, அந்த டிசைன் தான் அபியோட கண்ண உறுத்தி களவாட பிளான்போட வச்சிருக்குது. அடுத்து ஒரு வாரமா தொடர்ந்து வீட்டுக்கு வந்துருக்காங்க அபி. அதனால சந்தேகப்பட்ட மூதாட்டி எதுக்காக தினமும் வர்றனு கேட்ருக்காங்க. அப்போ, பல காரணங்களை உருவாக்கி பதில் சொன்ன அபி, கடந்த வெள்ளிக்கிழமை கணவர் விஷ்ணுவோட வந்துருக்காங்க.குழந்தைக்கு வெயிட் பாக்குறதுக்காக அழகிய மண்டபத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கு வந்ததாகவும், அப்டியே பக்கத்துல உங்களையும் பாத்துட்டு போகலாம்னு வந்ததாகவும் சொல்லிருக்காங்க இளம்தம்பதி. அத நம்புன வசந்தா வழக்கம்போல வீட்டுக்குள்ள கூப்ட்ருக்காங்க.வரும்போதே கையில MAAZA ஜூஸோட வந்த அபி, அத ஒரு டம்ளர்ல ஊத்தி மூதாட்டிய குடிக்க சொல்லிருக்காங்க. வேண்டாம்னு மூதாட்டி மறுத்தும் விடாத தம்பதி கம்பல் பண்ணி குடிக்க வச்சிருக்காங்க.குடிச்ச சில நொடியிலேயே மூதாட்டி மயங்கி சரிஞ்சதும் தம்பதி நேக்கா ஓடிட்டாங்க.நாலு மணி நேரத்துக்குப் பிறகு எந்திரிச்ச மூதாட்டி போலீஸ்ல புகார் குடுத்துருக்காங்க. அடுத்து, தேடுதல்வேட்டையில இறங்குன போலீசார் இடலாக்குடிக்கு போய் அபியோட கணவரான விஷ்ணுவை சுத்தி வளைச்சிருக்காங்க. எதுவுமே நடக்காத மாதிரி கார்பெண்டர் வேலை பாத்துட்டு இருந்த விஷ்ணுவை கைது செஞ்ச போலீசார், திருட்டை கச்சிதமா முடிச்ச அபியை வலைவீசி தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - "என் புருஷனை கொன்னுடு" ரூ.1 லட்சம் பேரம் பேசிய கொடூரம், ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய சதிகாரி