பாழடைந்து காணப்படும் சேலம் ஏற்காடு பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பேருந்த நிலைய கட்டடத்தின் மேல்தளம் பழுதடைந்து மழைநீா் கசிவதாக கூறும் பயணிகள், மின்சாரம் இல்லாததால் பேருந்து நிலையம் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் குப்பை மேடாகவும் காட்சியளிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.