திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் யாகசாலை மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.இதற்காக யாகசாலை மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண்டபத்தை அலங்கரிக்க பல வண்ண தோரன மாலைகள் வந்துள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி ஆன சூரசம்ஹாரம் 27-ம் தேதி மாலையில் கோவில் கடற்கரையில் நடக்கிறது.