நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு Y பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதற்கான காரணம், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது தான் முழுமையாக தெரியவரும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றார்.