தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய "y" பிரிவு பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்லா கட்சியினருக்கும் கொடுக்கப்பட்டது போலதான் அவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விஜய் பாதுகாப்பு குறித்து அரசியல் செய்து பார்ப்பவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என விமர்சித்தார்.