கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா சித்தர் பீடம் கோயிலில் நடிகர் யோகி பாபு சிறப்பு வழிபாடு செய்தார். பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு தனது கையாலேயே பஞ்சமுக மங்கல ஆரத்தி தீபம் காண்பித்து வழிபாடு செய்த யோகி பாபு,பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.