மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தங்க தேர் இழுத்து வழிபட்டார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்க தேர் உற்சவத்தை எடுத்து நடத்தி அதிமுகவினர் தேர் இழுத்து வழிபட்டனர்.