கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழு இருப்பதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் வெளியே செல்லுமாறு ஊழியர்கள் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும் முறையாக பராமரிக்காமல் விடுதி அசுத்தமாக உள்ளதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.