திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரபல பேக்கரியில் வாங்கிய சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையம் அருகே உள்ள கிங்ஸ் பேக்கரியில் கல்லூரி மாணவர்கள் வாங்கிய உணவில் துர்நாற்றம் வீசவே, சிக்கன் துண்டுகளை பிரித்து பார்த்தபோது உள்ளே வெள்ளை நிறத்தில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.