மாமல்லபுரத்தில், வெளிநாட்டு பயணிகள், நட்சத்திர ஓட்டல் பெண் பணியாளர்களின் ஆடல், பாடல்களுடன் களை கட்டியது உலக சுற்றுலா தினவிழா. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், செங்கல்பட்டு சப்-கலெக்டர் மாலதி ஹெலன் முன்னிலையில், வெளி நாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரிய, கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் நெற்றியில் திலகமிட்டு, மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, வெளிநாட்டு பயணிகள் இசைக்கு மயங்கி நடனம் ஆடியும், பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் தலையில் கரகம் வைத்து ஆடியும் அசத்தினார். தொடர்ந்து, உலக சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணி கடற்கரை சாலை, கிழக்கு ராஜவீதி, கோவளம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.