விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த உலக அமைதி குழுவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உலக அமைதி கோபுர திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், உலக அமைதி குழு கடந்த 12 ம் தேதி மதுரை காந்தி மியூசியத்திலிருந்த பாதயாத்திரையை தொடங்கியது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் முன் ஜப்பான் மொழியிலான பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.