உலக முடி திருத்துவோர் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம், ஆதி மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செப்டம்பர்-16ஆம் தேதி, உலக முடி திருத்துவோர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கம், ஆதி மருத்துவ சமூக சங்கம் சார்பில், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரனுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு-தேவனாங்குறிச்சி சாலையில் உள்ள கீழேரிப்பட்டி கே.ஆர்.மஹாலில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அண்ணா சிலை அருகில் இருந்து திருச்செங்கோடு நான்கு ரத வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. அண்ணா சிலை அருகே கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இச்சங்கத்தினர் முன் வைத்தனர்.