உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். நாகை மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ரவி, வேதாரண்யம் அகஸ்தியம் பள்ளிக்கு சென்று அங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபத்தில் உள்ள தியாகிகள் ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரலாயத்திற்கு சென்ற ஆளுநர், அன்னையின் அருள் வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி மண்டியிட்டு, கண்களை மூடி மனமுருக வேண்டினார். ஆளுநருக்கு பேராலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.