தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் கடல் பாதையை 230 மீட்டர் நுழைவு வாயிலாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக, முடிந்த உடன் ஆசியாவின் மிகப் பெரிய துறைமுகமாக தரம் உயர்த்தப்படும் என்று தூத்துக்குடி துறைமுக குழு தலைவர் சுஷா ஆனந்த் குமார் புரோகித் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே முதல் பசுமை துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மாறவுள்ளதாக கூறினார். மேலும் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் வசதி மற்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.