திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையத்தில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்தியன் ஆயில் அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.