வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சிப் போக்கால் கூலித்தொழிலாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாந்தாங்கல் மோட்டூரை சேர்ந்த சபீர் அகமது என்பவர், நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறப்படுகிறது.