சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றின் ஆழம், கழிவுகளின் அளவுகள் மற்றும் ஆற்றின் தன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.