புதுச்சேரியில் நவீன இயந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியினை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். பாதாள சாக்கடை குழாய்களுக்குள் கேமரா அனுப்பபட்டு எங்கு அடைப்பு உள்ளது என்பது கண்காணிக்கப்பட்டு, பின்னர் அதிக அழுத்தம் கொண்ட குழாய் மூலம் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.