வாழை நார் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைத்தோட்டத்தில் வெட்டப்பட்ட வாழை மரங்களிலிருந்து வாழைநார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாழைத்தார் வெட்டும் பணிகள் முடிவடைந்ததும் வாழை தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து அந்த வயலை குத்தகைக்கு எடுத்து ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி எடுத்து, அதிலிருந்து நாரை உரித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ந்த பின்னர், ஒரு கட்டுக்கு 500-வாழை நார்கள் கட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும். வாழையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் நார்கள் சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலை, ஆள் உயர மாலை, சிறிய வகை பூக்கள் கட்டுவதற்கும் பயன்படுவதாக கூறும் விவசாயிகள், காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது தற்போது மழை விட்டுவிட்டு பெய்வதால் நார்களை காய வைப்பது சிரமம் ஏற்படுவதாகும். ஆட்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒரு கட்டு வாழை நார் ரூபாய் 800-விலை போனால் மட்டுமே கட்டுபடியாகும் எனவும் மழையில் அடிப்பட்டு, பதப்படுத்த முடியாத சூழ்நிலையால் கட்டு ரூபாய் 400-மட்டுமே விலை போவதால் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. வாழை நார்கள் பிரித்தெடுக்கும் விவசாயிகளின் நலன் கருதி தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். Related Link ரூ.15,000 லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர்