மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு, ஆறரை மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆட்டுக்குட்டிகள் அடைத்து வைக்கப்படும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்தவர், பாஜக மகளிர் அணியினரின் நீதி கோரிய பேரணி வெற்றி பெற்றதாக கூறினார்.