திருவள்ளூர் அருகே மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர். மப்பேடு இந்தியன் வங்கி கிளையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தீபா என்பவர், 100க்கும் மேற்பட்ட பெண்கள் வங்கியில் செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்ததுடன், வங்கியில் இருந்து பெண்கள் கடன் பெற்றதாக கணக்கு காட்டி ஒன்றரை கோடி வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தீபா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.