செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் குழு கூட்டமைப்பு மற்றும் குடியிருப்பு மன்றம் சார்பில் மகளிர் தின ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பரதநாட்டியம், கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி அசத்தினர்.