இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. குதிரை, காளை, அய்யனார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட களிமண் சிலைகளை, சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.