கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தட்டில் மணி அடித்து போராட்டம் இந்நிலையில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கையில் தட்டில் மணி அடித்து ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கையில் தட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் வேலை நிறுத்த போராட்டம்இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Related Link யானைகளுக்கிடையே மோதல்