புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கொப்பம்பட்டியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், விநாயகர் கோவிலில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்ட பெண்கள், பின் அதனை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.